தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு, தொழில் உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, தொழில்நுட்பக் கல்லூரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது 39 தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்பாட்டில் உள்ளன.
இவற்றில் 110,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். 
தினகரன் 
Blogger இயக்குவது.