இலங்கையில் நேற்றைய தினம் (18) 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 23 பேரில் 18 பேர் டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Blogger இயக்குவது.