பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று எவரும் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாமென ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணி கட்சிகளினது உறுப்பினர்களிடம் அதன் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் (17) நடாத்திய விசேட சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இலக்காகக் கொண்டுதான் தேர்தல் பிரச்சாரங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மூவின மக்களையும் ஒன்றிணைத்தே இந்தப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படியான கருத்துக்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Blogger இயக்குவது.