மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 03 மாதங்களில் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


துபாயில் 07 உயிரிழப்புகளும் அபுதாபியில் ஒரு உயிரிழப்பும் சம்பவித்துள்ளன. அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே அதிகளவான  உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன. 

ஏனைய உயிரிழப்புகள் குவைத், சவூதி அரேபியா, ஓமான் ஆகிய நாடுகளில் சம்பவித்துள்ளன.

அவர்களில் எத்தனை பணிப்பெண்கள் அடங்குகின்றனர் என்று இன்னும் தங்களுக்குத் தெரியவரவில்லை எனவும், வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடந்த 03 மாதங்களில் உயிரிழந்த 23 பேரின் இறுதிக்கிரியைகள், கொவிட்-19 தொற்றினால் எழுந்துள்ள சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு அந்நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தற்போதைய நிலைமையை புரிந்துகொண்ட இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ளது. 

Blogger இயக்குவது.