பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு பொருத்தமான தினத்தை நியமிப்பது தொடர்பில் தடைகள் ஏற்படாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்காக வேறு தினத்தை தெரிவு செய்யும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு பொருத்தமான திகதியை தீர்மானிப்பதில் சட்டரீதியான ஆட்சேபனைகள் இல்லை என்றால் பிரிதொரு திகதியை அதற்காக ஆணைக்குழு நியமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (01) நினைவு கூரப்பட்ட உலக வாக்காளர்கள் தினம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பாகவும் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு இணங்க தேர்தலை நடத்த தயாராவதற்கு மேலும் 60 அல்லது 70 தினங்கள் தேவைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.