இவ்வருடத்தின் மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஜுன் மாதம் 30ம் திகதி வரையான காலப்பகுதியினுள் செல்லுபடியாகும் காலம் நிறைவு பெரும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களதும் கால எல்லையினை குறித்த அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றதாகும் திகதியிலிருந்து 06 மாத காலத்துக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.   

2020 ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப்பகுதியினுள் செல்லுபடியாகும் காலம் நிறைவு பெரும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களதும் கால எல்லையினை குறித்த அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றதாகும் திகதியிலிருந்து 03 மாத காலத்துக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ. அலககோன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.