அரசியலுக்காக மதத் தலைவர் கார்தினால் மெல்கம்  ரஞ்சித்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விமர்சித்திருப்பதை பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கண்டித்துள்ளார். இதுகுறித்து செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உள்ள கிறிஸ்தவ மக்களின் அடையாளமாக கார்தினால் மல்கம் ரஞ்சித் இருக்கிறார். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்ல ஏனைய சமூக மக்களும் அவர் மீது அதிக மதிப்பு வைத்துள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்தமைக்காக கார்தினாலை காரணம் சொல்வது இயலாமையை மறைப்பதற்கு கூறும் நொண்டிச்சாக்காவே கருத முடியும். மக்களுக்குச் சேவை செய்திருந்தால் மக்கள் ஆதரித்திருப்பார்கள். மக்களுக்குச் சேவை செய்யாமல், ஒவ்வொருவரைக் குறைகூறுவது கண்டிக்கத்தக்கது.
கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலியில் பாப்பரசரின் வழிகாட்டலுடன் இலங்கை மக்களுக்கு பணியாற்றி வருகிறார். அவர் பதியேற்றது முதல் முதல் இன்று வரை அவர் மீது எவரும் குற்றஞ்சாட்டாத அளவுக்கு கண்ணியமாக நடந்துகொள்கிறார். அவர் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை.
ஈஸ்டர் தாக்குதல் என்பது அரசின் புலனாய்வுப் பிரிவின் தோல்வியாலும், வெளிநாடுகள் எச்சரித்திருந்த போதிலும், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் நடந்த ஒன்றாகும். இதில் சுமார் 250இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. கிஸ்தவ தேவாலயங்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 
இதற்காக கார்தினால் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்காக அரசியல் ரீதியாக அவர் மீது குற்றஞ்சுமத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தினகரன்  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.