நேற்றைய தினம் எம்மை விட்டு பிரிந்த மௌலவி ஹனீபா ஆலிம் (பஹ்ஜி) அவர்களது மறைவுக்கு சியன ஊடக வட்டம் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் வழங்கிய அனுதாப செய்தி:


(ஜூன் 04) நேற்று காலை வபாத் ஆகிய மௌலவி ஹனீபா ஆலிம் (பஹ்ஜி) (மௌலவி யூஸுப் முப்தி, மௌலவி லாபிர் ஆகியோரின் தகப்பனார்), அண்மையில் வபாத் ஆகிய இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் இஸ்லாமிக் புக் ஹவுஸின் ஸ்தாபகருமான ஸெய்யித் முஹம்மத் ஹசரத், ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி உள்ளிட்ட மூன்று பெரும் அறிஞர்கள் சம காலத்தில் வபாத் ஆகியுள்ளார்கள்.

இவர்களது பணி நீண்ட காலம் தொடர வேண்டும் என்பதே எமது ஆவலாக இருந்தது. இந்த மிகப்பெரிய அறிஞர்கள் இந்த நாட்டில் சமூக விழிப்புணர்வுக்கும் ஆத்மீக, அரசியல், சன்மார்க்க விழிப்புணர்வுக்குமான பணியை செய்தவர்கள்.

கலாநிதி சுக்ரிக்கு நிகர் அவரேதான். அதே போன்று ஹனீபா ஆலிம் அவர்கள் சிறந்தவொரு தகப்பன், ஆலிம், வழிகாட்டி, ஒரு அதிபர், ஒரு அறபு மத்ரஸாவின் ஸ்தாபகர், குர்ஆனை மனனம் செய்த 500 இற்கும் மேற்பட்ட ஹாபிழ் மற்றும் ஹாபிழாக்களை உருவாக்கியவர், சிறந்த தாஈ.

அவர்களுடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அல்லாஹுதஆலா நல்ல பொறுமையை கொடுப்பானாக. அவர்களுடைய பணிகள் தொடர வேண்டும் என்பதுதான் எம்முடைய ஆவல்.

தஸ்கரையிலுள்ள அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற மத்ரஸா நிகழ்வொன்றுக்கு என்னை அழைத்து அறிவிப்புக் கடமையை வழங்கினார்கள். சுமார் 04 மணித்தியாலங்கள் அறிவிப்பு செய்தேன். அந்த பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்த்து துஆ செய்கிறேன்.

எங்களுடைய சியன ஊடக வட்டம் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, இறைவனிடத்தில் துஆவினையும் வேண்டிக்கொள்கிறோம்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.