ஒரே நேரத்தில் நூறுபேர் வரை ஜும்ஆ மற்றும் ஐவேளை கூட்டுத்தொழுகைகளில் கலந்துகொள்ள சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், கொவிட் 19 பரவுவதை தடுக்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், குறிப்பாக முகக்கவசம் அணிதல், நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுதல் மற்றும் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (அனுப்பப்பட்ட கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளது)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.