இலங்கை மின்சார உற்பத்தி (வழக்கமான அல்லாத ஆற்றலைத் தவிர்த்து) 
2020 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 967,043 ஜிகாவாட்டாக (22.7%) குறைந்துள்ளது

இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி (பாரம்பரியமற்ற மின் உற்பத்தியான சூரிய, காற்று, மினி-ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் (Biomass) தவிர்த்து) 2020 ஏப்ரல் மாதத்தில் 964,043 மெகாவாட் ஆக இருந்தது. இது 2020 ஜனவரி மாதத்தில் 12,46,863 மெகாவாட்டிலிருந்து 22.7 சதவீதம் குறைந்துள்ளது என தரவுகள் குறிப்பிடுகின்றன.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டத்தின் விளைவினால் தொழில்துறை, ஹோட்டல் மற்றும் உற்பத்தித் துறைகளின் நடவடிக்கைகளை தற்காலிகமாக வீழ்ச்சி அடைந்தமையே 2020 ஏப்ரலில் மின்சார உற்பத்தி குறைய பிரதான காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மின்சாரம் பொதுவாக சிங்கள - தமிழ் புத்தாண்டு காரணமாக உயரிய மட்டத்தை காட்டும். எனினும் இம்முறை பாரிய சரிவைக் காட்டுகிறது.

ஜனவரி மாதத்தில் 12,46,863 மெகாவாட், பெப்ரவரியில் 1,228,279 மெகாவாட், மார்ச் மாதத்தில் 1,206,069 மெகாவாட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 964,043 மெகாவாட் மின்சாரம் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுயாதீன மின் உற்பத்தியாளர்களால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்கள் அல்லது வெப்ப எண்ணெயிலிருந்து தனியார் துறையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 2020 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மொத்த மின்சார உற்பத்தியில் இருந்து 25 சதவீதமாக இருந்தது, அதே காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையால் இயக்கப்படும் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்கள் 13 சதவீதத்தை உற்பத்தி செய்தன என தரவுகள் காட்டுகிறது.

2020 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்ச இரவு நேர உச்ச தேவை 2020 மார்ச் 11 தினத்தில் 2,717.50 மெகாவாட் ஆகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.