பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேண்டி நான்கு மாவட்டங்களுக்காக தமது கட்சியினால் கையளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வண. கலகொடஅத்தே ஞானசார தேரரும் அபேட்சகராக போட்டியிடும் 'அபே ஜன பல' கட்சியினால் முன்வைக்கப்பட்ட ரிட் மனுவினை பரிசீலிக்காமல் நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் உள்ளடங்கிய நீதிபதிகள் குழுவினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

'அபோ ஜன பல' கட்சியின் மூலம் குருணாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களே இவ்வாறு குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

'

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.