மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் 'செந் தாரகை நிவாரணப் படையணி'யுடன் 'தேசிய புத்திஜீவிகள் அமைப்பு' (NIO) இணைந்து கண்டி பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொரோனா தொற்று தடுப்பு முகக் கவசங்களை இன்று (2020.06.01) அன்பளிப்பு செய்தது.

பேராதனை போ.வை.யின் ECG பிரிவு, இயன் சிகிச்சைப் பிரிவு, வைத்தியசாலைப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுக்குத் தேவையான பொருட்களும் இச் சந்தர்ப்பத்தில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பேராதனை போ.வை. பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன விஜேசிங்கவுடன் வைத்தியர்களான சேனக திவார்தண (இயன் சிகிச்சை) சங்கீத் மெதகொட (ECG) ஆகியோரும், செந் தாரகைப் படையணி சார்பில் மவிமு கண்டி மாவட்ட தலைவர் கயான் ஜானகவும், NIO சார்பில் கண்டி மாவட்ட முன்னாள் தேசிய இறைவரி ஆணையாளர் நிமல் விக்கிரமசிங்க, மிருக உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் சந்திரசிரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரோனா தொற்று காலத்தில் JVP யின் செந் தாரகைப் படையணியினால் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான சேவைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

ஹிஷாம் ஹுஸைன்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.