தனது சொந்தக் காலில் முன்னேறி தலை நிமிர்ந்த நாடுகளின் வரிசையில் சிங்கப்பூரை சிறப்பித்துக் கூறுவர். இலங்கையின் ஆட்சியாளர்களும் "இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம்" என சகட்டுமேனிக்குக் கூறிச் செல்வர்.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு, அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள்; அமைச்சர்களின் கல்வித் தகைமையை முக்கிய காரணியாகக் குறிப்பிடுவர்.

சிங்கப்பூர் பா.உ.க்களும்; அமைச்சர்களும் துறைசார் நிபுணர்களாகவும் பட்டதாரி - கலாநிதி - பேராசிரியர்களாகவும் இருப்பர்.

இலங்கையை சிங்கப்பூர் போல முன்னேறுவதாயின், எமது பாராளுமன்றமும் துறைசார் நிபுணர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாது.

அந்த இலக்கை சாத்தியப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 2020 பாராளுமன்றத் தேர்தலில், 'தேசிய மக்கள் சக்தி (NPP)' #திசைகாட்டி சின்னம், தேசிய பட்டியலில் ஏழு பேராசிரியர்களை (Professor) இடம்பெறுகின்றார்கள்.

1. Prof சந்தன அபேரத்ன
களனி பல்கலை கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி. வரலாற்றுக் கற்கைத் துறை பேராசிரியர். தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) தலைவர். தேசத்தை கட்டியெழுப்பும் கொள்கைத் தொகுப்பாக்கக் குழு உறுப்பினர்

2. Prof குமார் டேவிட்
பேராதனை பல்கலை கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலை கழக முன்னாள் பேராசிரியர்

3. Prof விஜய குமார்
பேராதனை பல்கலை கழகத்தின் இரசாயன விஞ்ஞானத் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர்

4. விசேட வைத்தியர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன
களனி பல்கலை கழகத்தின் மருத்துவ பீடத்தின் பொது சுகாதாரக் கற்கைத் துறை பேராசிரியர். பொது சுகாதார வைத்திய நிபுணர். சுகாதார கொள்கைத் தொகுப்பாக்கக் குழு தலைவர்

5. Prof ஜினசேன ஹேவகே
ருஹுனு பல்கலை கழகத்தின் இரசாயன விஞ்ஞானத் துறை பேராசிரியர். கல்விக் கொள்கைத் தொகுப்பாக்கக் குழு உறுப்பினர்

6. Prof பேமதாச ஜயகொடி
களனி பல்கலை கழகத்தின் பௌதிக விஞ்ஞானத் துறை பேராசிரியர். கல்விக் கொள்கைத் தொகுப்பாக்கக் குழு உறுப்பினர்

7. Prof சுசிரிபால மானவடு
ருஹுனு பல்கலை கழகத்தின் சிங்கள மொழித் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர்

எமது தாயகத்தையும் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் வரிசையில் நிமிர்ந்து நிற்கச் செய்து, வருங்கால சந்ததியைத் தலை நிமிர்ந்து வாழச் செய்வோம், இன்ஷா அல்லாஹ்

Hisham Hussain, Puttalam 
2020.06.06

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.