கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏன் அது குறித்து அறிவிக்காது காலம் தாழ்த்தப்பட்டதென்பதை சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இதனை கூறியுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ள 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலையில் நம்பிக்கையான தரப்பில் இருக்கும் எமக்கு தகவல்கள் கிடைத்தன.

10 ஆம் திகதி அதனை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏன் அந்த தகவலை வெளியிடவில்லை என்பது சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவுப்படுத்த வேண்டும்.

200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்த நிலையில், 56 பேரை மாத்திரம் கூறி விட்டு மீதமிருந்த 100க்கு மேற்பட்டோர் பற்றிய தகவல்களை இரண்டாவது சுற்றில் வெளியிட்டமைக்கான காரணம் எமக்கு தெரியவில்லை. ஏன் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

மீள பரிசோதனை செய்தார்களா என்பதும் தெரியவில்லை. அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றதா என்பதும் தெரியவில்லை. ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையை வெளியில் கூற அச்சமா என்பதும் தெரியவில்லை எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

- ஸ்டீபன் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.