கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் புதிய தலைவர் பென் ஸ்டோர்க்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தமதாக்கிக் கொண்டார்.

இதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. எனினும் இடைக்கிடையே போட்டிக்கு மழை யெமனாக குறிக்கிட்டது. எனவே முதல் நாளில் இங்கிலாந்து அணி 35 ஓட்டங்களுக்கு 01 இழந்து ஆடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இங்கிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் பென் ஸ்டோர்க்ஸ் மாத்திரம் 43 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் மே.தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹொல்டர் 06 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.