மதவழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 79 ஆவது சரத்தின் பிரகாரம், மதவழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் குழுக்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் மேற்கெள்ளப்படும் விடயங்கள்  தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,  மதவழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே, அதிகளவான மதவழிபாட்டுத் தலங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, மதவழிபாட்டுத் தலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.