நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் வழிகாட்டுதல்களை கருத்திற் கொண்டு பாடசாலை துறையினுள் ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளை கண்காணிப்பதற்காக ஒரு வாரக்காலம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அனைத்து தனியார் பாடசாலைகள் , சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.