ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8ம் திகதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 8 ஆம் திகதி முடிவடையும் என  பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆட்சிக்குழு அடுத்த வாரம் கூடுகிறது.

செப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்று யூகங்கள் எழுந்திருந்தாலும், இந்திய அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பி.சி.சி.ஐ அதை ஒரு வாரத்திற்குள் முன்னர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.