(இராஜதுரை ஹஷான்)

சேரிப்புறங்கள் இல்லாத  நகரமாக கொழும்பு நகரை மாற்றியமைப்போம்.
தலைநகரை அபிவிருத்தி செய்ய ஜனாபதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் வகுத்த திட்டங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் செயற்படுத்தப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

மன்ற கல்லூரியில்   இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் கொழும்பு நகரை அழகுப்படுத்தும்   செயற்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன. சேறிபுறங்கள் பெருமளவில் இல்லாதொழிக்கப்பட்டு பலர் முறையான  குடியிருப்புக்களில் குடியமர்த்தப்பட்டார்கள். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இத்திட்டங்கள்   இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

சேறிபுறங்களை   இல்லாதொழித்து மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான  குடியிருப்புக்கள் வழங்கப்படும். தலைநகரை அழகுப்படுத்தும் ஜனாதிபதியின்   திட்டம் புதிய   அரசாங்கத்தில் முழுமைப்படுத்தப்படும்.  அத்துடன் திண்மகழிவகற்றல்  பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.

நாங்கள்  வகுத்த திட்டங்கள் முழுமைப்படுத்தியிருந்தால் துறைமுக  நகர அபிவிருத்தி முழுமைப்படுத்தப்பட்டு    மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டிருக்கும்.

கடந்த அரசாங்கம்  அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. அரசியல் பழிவாங்களுக்கு முன்னுரிமை வழங்கியது. இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள்    எமது ஆட்சியில் முழுமைப்படுத்தப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.