இலங்கையில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இச்சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

ராகமை ஈரல் மாற்று சத்திரசிகிச்சை குழுவுடன் இணைந்து, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களினால் இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட சத்திரசிகிச்சை  நிபுணர், வைத்தியர் ரொஹான் சிறிவர்தனவும், அவருடன் நாடளாவிய ரீதியிலுள்ள விசேட சத்திரசிகிச்சை நிபுணர்களும் இணைந்து கடந்த 14ஆம் திகதி இச்சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமியொருவருக்கு  மேற்கொள்ளப்பட்ட இச்சத்திரசிகிச்சை  12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்தது. குறித்த சிறுமியின் ஈரல் இயக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பை  (chronic cirrhosis)  தொடர்ந்து, அச்சிறுமியின் தாயிடமிருந்து பெறப்பட்ட ஈரலின் பகுதியிலிருந்து குறித்த ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிருள்ள ஒருவரிலிருந்து ஈரல் எடுக்கப்பட்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.