கொவிட் 19 நோய்ப் பரவல் தீவிரமடைந்த தினங்களில் வழங்கப்பட இருந்த விடுமுறைகள் மற்றும் ஊதியங்கள் போன்றன துண்டிக்கப்பட்டமைக்கு எதிராக கண்டி போதனா வைத்தியசாலை தாதியர் குழுவொன்று நேற்று (13) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சுக வீரர்கள் என்ற பெயரோ, ஹோட்டல் உபசாரங்களோ வேண்டாம் என்றும் தமக்குரிய கொடுப்பனவுகளை வழங்கவும் என்ற கோசங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் நாட்களில் தீர்மானமிக்க முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தற்போது எவரும் சுய விருப்பில் பணிகளுக்காக முன்வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர் தமக்கு வேறு எந்த வசதிகளும் தேவையில்லை என்றும், தமது கொடுப்பனவுகளை மாத்திரம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது,
‘நாம் எமது சொந்த வாகனங்களில் வந்து சேவையில் ஈடுபட்டோம். எனினும், வழங்கப்பட வேண்டிய மிகக் குறைந்த கொடுப்பனவுகளேனும் வழங்கப்படவில்லை. இப்போது இன்னுமோர் கொரோனா அலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் தாதியர் ஏமாறுவார்களா என்ற கேள்வி உள்ளது. ஊடக கண்காட்சிகள் நடத்தி, நிர்வாகக் குழுவை ஏமாற்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள நினைப்பதாயின், அதற்கு இம்முறை இடமில்லை’

Thanks - medialk.com


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.