துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இன்று திறக்கப்பட்டது.

குறித்த மாளிகை அருங்காட்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் துருக்கிய நீதிமன்றம் அதனை மசூதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மக்கள் அப்பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகைக்காக திரண்டனர். 

ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 1934 இல் ஒரு அருங்காட்சியகமாக பதிவிட்டது.

இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை இரத்துச் செய்து, பள்ளிவாயலைத்தவிர வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடியாது எனவும் அது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், உலகப் புகழ்பெற்ற இந்த ஹாகியா சோபியா மாளிகையை ஜூலை 24ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.

இதன்படி, இன்று இந்த மாளிகை தொழுகைக்காக அனுதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் ஆயிரம் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஏனையவர்கள் மாளிகைக்கு வெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.