2020 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின் கட்டணம் தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் கருத்திற் கொண்டு அதற்காக சலுகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கடந்ம வாரம் அமைச்சில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு 02 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுமென, இந்த காலப்பகுதிக்குள் மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த 3 மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருப்பின், அதற்குரிய பணத்தை மீள வழங்கவோ அல்லது எதிர்வரும் மாதங்களுக்குரிய மின்சாரப் பட்டியலில் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.