சகல மாவட்டங்களுக்குமான வாக்குச் சீட்டுக்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சககம் அறிவித்துள்ளது.

அந்த பணிகள் அனைத்தும் இன்று (04) பகல் நிறைவடைந்தாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக கிட்டத்தட்ட ஒரு கோடியே 72 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்குச் சீட்டுக்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளித்த பின்னர் அரச அச்சகத்தில் வைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு கையளிக்கப்படும்.

தேர்தலுடன் தொடர்புடைய மற்றைய ஆவணங்களும் அச்சிட்டு முடிவடைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்கள் அடுத்த வாரம் அஞ்சலுக்காக கையளிக்கப்படவுள்ள நிலையில், அதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் பகிரப்படவுள்ளன.

இதேவேளை கண்டியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, அரசியலமைப்பை மதிக்கும் மற்றும் சுயாதீனமான பொது சேவையை மீள் புதுப்பிக்க கூடிய நபர்களை தெரிவுச் செய்ய வேண்டும் என்றார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.