புத்தளத்தில் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பாக வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என தௌிவுபடுத்துமாறு, சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆயின் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விளக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளரும் அவரின் ஆதரவாளர்களும் தலைக்கவசம் இன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.