* பேருவளையுடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்புள்ளது
* கட்சிக்காக அரும் பணியாற்றியவர் என பிரதமர் புகழாரம்

பேருவளையுடன் எனக்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. நாம் பாதயாத்திரையில் அன்று வந்தபோது மர்ஜான் பளீலின் தந்தை பளீல் ஹாஜியார் எமக்கு உணவு தந்து  உதவியதை இன்று நன்றியுடன் நினைவு கூருகிறேன். அன்றிலிருந்து எமது கட்சியின் வளர்ச்சிக்காக அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றிய போதும் அவரோ,  அல்லது அவரது மகன் மர்ஜானோ கட்சியை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்லவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

பேருவளை நகர சபை முன்றலில் நேற்றுமுன்தினம் பொதுஜன பெரமுன வேட்பாளர் பியல் நிசாந்தவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வேட்பாளர்களான பியல் நிசாந்த, ரோஹித அபேகுணவர்தன, தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு இத்தேர்தலினூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுத்தர வேண்டும்.   இன்று ஐ.தே.க இரண்டாக பிரிந்துள்ளன. சஜித் வேறாகவும் ரணில் தரப்பினர் வேறாகவும் போட்டியிடுகின்றனர்.  

இப்போட்டி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதல்ல. ஸ்ரீகொத்தவை எப்படியாவது ரணிலிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதே சஜித்தின் திட்டம். அதன் மூலமே கட்சியை பலப்படுத்தலாமென சஜித் நினைக்கிறார். எது எப்படியோ நாட்டு மக்கள் இம்முறை இருவருக்கும் சிறந்த பாடத்தை புகட்டுவர்.  

மைத்திரி - ரணில் நல்லாட்சி நாட்டில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது எமது மக்களுக்கு தெரியும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.