கந்தகாடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் இரண்டில் உள்ள 375 பேரின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இதுவரையில் கிடைக்கபெற்றுள்ளதாக இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய பரிசோதனை முடிவுகள் இன்று (10) மற்றும் நாளை (11) கிடைக்கும் எனவும், குறித்த இரு புனர்வாழ்வு மத்திய நிலையங்களிலும் அதிகாரிகள் உட்பட 1150 பேர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் மேலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.