நாடளாவிய ரீதியிலுள்ள முன்பள்ளிகளை அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பவித்ரா வன்னியாராச்சி இன்று சுகாதார அமைச்சில் இது குறித்து தௌிவுபடுத்தியதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகமி முதல் நாடு முழுவதுமுள்ள முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், கல்வி அமைச்சரும், சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அமைச்சரவையில் வைத்து இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.