இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 68 அமைச்சுக்கள் இருக்கின்ற போதிலும், அரச பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் நான்கு மாதங்களுக்கு 17,400 கோடி ரூபா பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அநுர குமார திஸாநாயக்க, இந்தத் தொகை பித்தலை, களிமண் ஆகிய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையுடன் ஒப்பிடும் போது 300 மடங்கு அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்காக 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள போதிலும், இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் அமைச்சர் யார்? தேசிய பாதுகாப்பின் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு சொந்தமாகாது. பொலிஸ், மாவட்ட அலுவலகங்கள் ஆகியவை மட்டுமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை இவர்கள் கூறவில்லை. ஆனால் அதிகாரமற்ற முறையில் ஜனாதிபதி பணியாற்றுகிறார். இது அரசியலமைப்பிற்கு முரணானதாகும். எனவே, அரசியலமைப்பை மீறும் செயலாகும். அமைச்சர் யார் என்று தெரியாத அமைச்சுக்கு 174 பில்லியன் ரூபாவை பாராளுமன்றத்தில் இருந்து கோரியிருப்பதை ஏற்க முடியாது. என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.