இன்று ஆரம்பமாகவுள்ள புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும்.

25 - 40 வயதுக்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திரு. வாசுதேவ நாணயக்கார, திரு. ஆர். சம்பந்தன், திரு. சீ. பி. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.

இம்முறை பொதுத்தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக இதுவரையில் பெயரிடப்படவில்லை. இதனால் பாராளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ளும் 225 உறுப்பினர்களுள் 223 பேர் மாத்திரமே இடம்பெறுகின்றனர்.

73 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இன்று இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இடம்பெறவில்லை. பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர மற்றும் விளக்கமறியலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.