அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் றொபேர்ட் ட்ரம்ப் தனது 72 ஆவது வயதில் காலமானார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

'அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பர்' என்று டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் நகர வைத்தியசாலை ஒன்றில், உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த றொபேர்ட் ட்ரம்ப்பை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ட்ரம்ப் வைத்தியசாலைக்குச் சென்று நேரில் நலம் விசாரித்தார்.

அமெரிக்க ஊடக அறிக்கைகள் றொபேர்ட் ட்ரம்ப் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தன, ஆனால் அவருக்கு என்ன பாதிப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் 'எனது அருமையான சகோதரர் றொபேர்ட் இன்று இரவு நிம்மதியாக காலமானார் என்பதை நான் கனமான இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரது நினைவு என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.' என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.