எல்ல, வெல்லவாய வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராவண எல்லை பகுதியில் வேள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் ஒருவர் வேனில் சிக்குண்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்துக்கு முகம் கொடுத்த அனைவரும் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.