நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலிலே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் வத்தளை நகர சபை உறுப்பினருமான எஸ். சசிகுமார் அவர்களை வெற்றி பெறச்செய்வதற்காக வேண்டி பாடுபட்ட தேர்தல் பிரச்சார இணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு  சென்ற ஞாயிரு பின்னேரம் வத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் கதாநாயகன் சசிகுமார் அவர்களை தேசிய ஐக்கிய முன்னணியின் முன்னாள் கம்பஹா மாவட்ட  பாராளுமன்ற வேட்பாளரும் புனர்வாழ்வு அதிகாரம் சபையின் முன்னாள் இணைப்பதிகாரியும் பாராளுமன்ற வேட்பாளர் சசிகுமார் அவர்களின் அத்தனகல்ல, பியகம, மீரிகம மற்றும் தொம்பே தொகுதிகளுக்கான பிரதான  தேர்தல் பிரச்சார இணைப்பாளருமான ஹுஸைன் ஸாலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பியகம பிரதேச சபை வேட்பாளர் அலவி ஹாஜி ஆகிய இருவரினால்  கம்பஹா மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாக நிகழ்வின் கதாநாயகன் சசிகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வேட்பாளர் சசிகுமார் அவர்களின் தேர்தல் பிரச்சார இணைப்பாளர்களாக செயற்பட்ட ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் (J.P. ) சட்டத்தரணி நியாஸ் மொஹமட், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை வேட்பாளர்களான G.A. சல்மான், கலீலுர் ரஹ்மான், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் M.B.M.அரபாத் உட்பட கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய 200 க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சார இணைப்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டதோடு கலந்து கொண்ட அனைவருக்கும் இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

தகவல் - நாஸர் JP
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.