இலங்கையில் பல்வேறு நாடுகளையும் பூர்வீகமாகக்கொண்ட பல்வேறு இனத்தவர்கள் வசிக்கிறார்கள். இதில் துருக்கப்பூர்வீகத்தை கொண்ட இரண்டு சாரர் வசிக்கிறார்கள். 

முதலாமவர்கள் பேருவளையைச் சேர்ந்த காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் இமாமுஸ் ஸெய்லான் அஷ்ஷெய்ஹ் முஸ்தபா பின் பாவா ஆதம் றஹ்மதுல்லாஹ் அவர்களின் குடும்பத்தவர்கள் ஆவர். இவர்களின் முன்னோர்கள் துருக்கியின் கொன்யா நகரைச் சேர்ந்ந அரச குடும்பத்தவர்கள் ஆவார். அரசியல் முரண்பாடுகளினால் துருக்கியில் இருந்து இலங்கை வந்த   இவர்கள் பேருவளையில் குடியமர்ந்தார்கள். இளவரசர் ஜமால்தீன் அவர்களின் அவர்களை நினைவுகூறும் வகையில் பேருவளையில் " செய்கு ஜமால்தீன் வீதி" என்ற பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அல்லாமா முஹம்மத் உவைஸ் அவர்கள் இது பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். 

இரண்டாவது தரப்பினர் வெல்லவாய யுத்தில் போர்த்துக்கேயரை எதிர்த்துப்  போரிடுவதற்காக மன்னர் செனரத் , இரண்டாம் ஆகியோரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த துருக்கியர்கள் ஆவர். இவர்களுடன் அரபிகளும் இருந்ததாகவும், ஒட்டகங்கள் அடங்கிய படையொன்றும் இதன் போது பயன்படுத்தப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார். இதன் போது இலங்கை வந்தவர்கள் ஸ்தான்பூலை பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். ஏறாவூர் பிரதேசத்தில் இவர்களின் பூர்வீகக் குடும்பங்கள் வசித்துவந்தார்கள். முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் தாய் வழி பரம்பரையும் துருக்கி பூர்வீகம் கொண்டவர்களாவர்.  கிழக்கு மாகாணத்தில் உள்ள துருக்கி வம்சாவளி பற்றிய  ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். 

இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் யூடியூப் மூலம் பார்வையிடலாம். https://youtu.be/D9U0Y2ruEm4


 பஸ்ஹான் நவாஸ்                     இலங்கை ஒலிபரப்புக்       கூட்டுத்தாபனம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.