கடந்த 5 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ´பிள்ளையான்´ எனும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையினை இன்று (20) நிகழ்த்தினார். இதன்போது அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியதாகவும் இருப்பினும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தன்னை அவர்களுக்குச் சேவை செய்வதற்காக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கும் பல தடங்கல்களும் தாமதங்களும் இருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டும். இப்படி ஒரு சூழலில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தற்போது வட பகுதி மக்களும் தென் பகுதி மக்களும் இணைந்து பலமான ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளதாகவும் இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தான் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.