குருநாகல் அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பை நாளைய தினம் (25) அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


குருநாகல் நகரசபை மேயர் துஷார சஞ்சீவ உட்பட 5 பேரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை இன்றைய தினம் வரையில நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த தினம் இடைக்கால தடையுத்தரவொன்றினை வௌியிட்டிருந்தது.

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு குருநாகல் நகரசபை மேயர் உட்பட 5 பேர் தாக்கல் செய்திருந்த ரீட் மனு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிபதிகளான எம்.எம்.டி நவாஸ் மற்றும் சோபித ராஷகருணா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தனர்.

இதன்போது குறித்த மனு தொடர்பில் இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட உள்ளதுடன் அதுவரையில் பிடியாணையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.