கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து வீடியோ வெளியிட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம்

மைல்ட் கொரோனா பாஸிட்டிவ் என்பதால் மருத்துவர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு கூறியதாவும், ஆனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறினார். வீடியோ வெளியிட்ட எஸ்பிபி தனக்கு லேசான கொரோனா பாதிப்புதான் என்றும் விரைவில் வீடு திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் தன்னை யாரும் போன் செய்து நலம் விசாரிக்க வேண்டாம் என்றும், தான் நலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார் எஸ்பி பாலசுப்பிரமணியம். 

கவலைக்கிடம் 

இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 ஐசியூவில் சிகிச்சை 

நேற்று இரவு முதல் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கண்காணிப்பு 

மேலும் மருத்துவக் குழுவினர் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

நேற்றுதான் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ரசிகர்கள் அதிர்ச்சி இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எஸ்பி பாலசுப்பிரமணியம் 15க்கும் மேற்பட்ட மொழிகளில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - பில்மிபீட்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.