அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளராக டொன்ல்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்சியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நாட்டில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராகவும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது.

இதையடுத்து ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள குடியரசுக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்தது.

தற்போது ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதியாக உள்ள மைக் பென்சி மீண்டும் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குடியரசுக்கட்சி சார்பில் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதியாக உள்ள மைக் பென்சி இரண்டாவது முறையாக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்கள் என குடியரசுக்கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டொனால்டு டிரம்ப் மற்றும் மைக் பென்சி ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என குடியரசுக்கட்சியின் தேசிய குழு அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனுக்கு போட்டியாக டிரம்பும், கமலா ஹாரிசுக்கு போட்டியாக மைக் பென்சியும் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.