கொவிட் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது தொடர்பாக பாடசாலை சமுகத்தினரை தெளிவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சினால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டிகளுக்கு அமைவாக இதுவரையில் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோன்று வழிகாட்டி ஆலோசனைகளும் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கொவிட் 19 ஐ தடுப்பது தொடர்பான பாடசாலை வழிகாட்டிகளை உள்ளடக்கிய இறுவட்டுகளும் (CD) பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இவற்றை பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இந்த இறுவட்டு பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த இறுவட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk மூலம் அல்லது இந்த இறுவட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பு Barcode பயன்படுத்தி YouTube மூலமும் பெற்றுக்கொள்ளமுடியும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.