(பஸ்ஹான் நவாஸ்)

ஆஷூரா தினம் என்பது உலக வரலாற்றில் முக்கிய நாளாகும். 

ரஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு சென்ற சென்ற போது அங்கு வாழ்ந்த யூத மக்கள் நோன்பிருந்தார். அவர்களை நோக்கி நீங்கள் ஏன் இன்று நோன்பு நோற்றிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு மதீனா நகர யூத மக்கள் 'இன்று முஹர்ரம் மாதம் பத்தாம் நாள். அதாவது ஆஷூரா தினம். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவரது கூட்டத்தாரையும் (பனி இஸ்ராயீல்களையும்) கொடுமைக்கார ஆட்சியாளன் பிர்அவ்னிடமிருந்து  இறைவன் பாதுகாத்த நாள். அதற்கு நன்றி செலுத்துவதற்காகவே நாம் இன்றை தினத்தில் நோன்பு வைக்கிறோம். என்றார்கள்.  யூதர்கள் இன்றை தினம் நோன்பு வைத்திருப்பதால் யாரும் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்க வேண்டாம் என்று ரஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறவில்லை. அதற்கு அவர்கள் ' உங்களை விட மூஸா நபி அவர்களுக்கு நாங்களே கடமைப்பட்டவர்கள். நான் அடுத்தவருடமும் உங்கள் மத்தியில் வாழ்ந்தால் தாஸூஆ தினத்திலும் ( முஹர்ரம் 09ம் நாளில்) நோன்பு வைப்பேன் என்றார்கள். 

முன்னோர்களின் நிகழ்வுகளை நினைவுகூர்தல் என்பதன் முக்கியத்துவம் இதன் மூலம் வரவேற்கப்படுவதைக் காணலாம். துருக்கியில் வாழும் மக்கள் முஹர்ரம் 10ம் நாள் அதாவது ஆஷூரா தினத்தில் விஷேட உணவை தயாரிக்கிறார்கள். இதற்கு ஆஷூரா புடின் அல்லது நூஹ் நபியின் புடின் என்று அழைக்கிறார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. 

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலில் ஏறிக்கொண்டவர்கள் மாத்திரம் உயிர் தப்பினார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் இன்றை துருக்கியின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள 'அராரத் மலையில்' Mount Ararat தரை தட்டியது. பாரிய வெள்ளத்திலிருந்து நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் கூட்டத்தார்களையும் பாதுகாத்தமைக்க மகிழ்ச்சியை வெளியிடும் நோக்கில் ஆஷூரா புடின் அல்லது நூஹ் நபியின் புடின் ஆஷூரா தினத்தில் தயாரித்து உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் கொடுப்பது துருக்கி மக்களின் சம்பிரதாயமாகும். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் கூட்டத்தாரும் கப்பலில் இருந்த போது இந்த புடினை தயாரித்தார்கள் என்பது துருக்கி மக்கள் நம்புகிறார்கள். 

பேரீத்தம்பழம்,மாதுளை, அத்தி, திராட்சை, முந்திரப்பருப்பு, சீனி, கருவாப்பட்டை, தோடம்பழம், கோதுமைமா, பன்னீர் என்பனவற்றை பயன்படுத்தி துருக்கி மக்கள் ஆஷூரா  புடினை தயாரிக்கிறார்கள். 

ஆஷூரா புடின் என்பது மார்க்கம் அல்லது இது துருக்கி மக்களின் சம்பிரதாயம். சம்பிரதாயங்களைப் பேணுவதில் அவர்களை எநதளவு நுணுக்கமாக இருக்கிறார்கள் என்பதே எமக்கான படிப்பினையாகும். ஆனால் நாங்களே எமது சம்பிரதாயங்களை துருவித்துருவி அழித்துவருகிறோம்.

இலகுவான  விளக்கம் : யூதர்கள் தமது நபியான மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கவும், துருக்கியர்கள் மனித சமூகம் பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதற்குமாக ஆஷூராவை ஞாபகமூட்டுகிறார்கள். பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் யூதர்கள் பல்லாயிரம் வருடங்களாக நோற்று வந்த நோன்பை தடைசெய்யவில்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உங்களை விட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அல்லவா கூறினார்கள். நீண்டகாலமாக சமூகத்தில் இருந்த மரபுகள் இஸ்லாமிய அடிப்படையுடன் முரண்படாதவிடத்து அவற்றை முன்கொண்டு செல்ல அனுமதித்துள்ளார்கள்.

படவிளக்கம்: 

தூபான் என்ற வெள்ளத்தில் சிக்கிய  நூஹ் நபி அவர்களின்  கப்பல் தரித்திருந்த துருக்கியின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள 'அராரத் மலை

மற்றும் ஆஷூரா புடின் தயாரிக்கும் காட்சிகள். 








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.