ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவு இம்முறை ஆளும் கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நால்வரை வாழ்த்தும் நிகழ்வு நேற்று (16) தெஹிவளை ரோஸ்வூட் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜனாப். றாசிக் சறூக், தேசிய அமைப்பாளர் ஜனாப். ஏ.எல்.எம் உவைஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வில் புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர். 

நீதியமைச்சர் கெளரவ அலிசப்றி, வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான முன்னாள் பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான், அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெளரவ அதாவுல்லாஹ், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மர்ஜான் பழீல் ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வட மேல் மாகாண ஆளுநர் முஸம்மில், பிரதமரின் முஸ்லிம் விவகார ஆலோசகர் கலாநிதி ஹஸன் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


(ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் ஊடகப் பிரிவு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.