2020.09.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. அரச மற்றும் நியதிச்சட்ட அரச நிறுவனங்களின் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்தல்
அரச ஊடக நிறுவனங்கள் அரச வரவு செலவில் சுமையற்ற வகையில் நடாத்திச் செல்லும் வகையில் அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் அறிவித்தல்கள் மற்றும் விளம்பர செலவுகளில் 25% பெறுமதியான விளம்பர நிகழ்ச்சிகள் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட பத்திரிகைக் கம்பனி போன்ற அரச ஊடக நிறுவனங்கள் மூலம் கட்டாய விளம்பர நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


02. 2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை லிட்ரோ எரிவாயு கம்பனியின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) உலோக சிலிண்டர்கள் விநியோகத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபார்சுகளுக்கமைய இலங்கை லிட்ரோ எரிவாயு கம்பனியின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) உலோக சிலிண்டர்கள் விநியோகத்திற்கான ஒப்பந்தம் கீழ்வரும் வகையில் வழங்குவதற்காக நிதி அமைச்சர் கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


• கிலோகிராம் 2.3, கிலோகிராம் 12.5, கிலோகிராம் 37.5 வகைகளின் கீழ் வரிசைக்கிரகமாக சிலிண்டர்கள் 22,000 உம், சிலிண்டர்கள் 105,056 உம் மற்றும் 1,260 அளவுகளில் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்கன் டொலர் 2.18 மில்லியன் தொகைக்கு M/s, Metal Mate Co. Ltd இற்கு


• கிலோகிராம் 5 வகையின் கீழ் 117,040 சிலிண்டர்கள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்கன் டொலர் 1.58 மில்லியன்கள் தொகைக்கு Sahamitr Presure Containers Public Co. Ltd இற்கு
03. 2020/21 பெரும்போகச் செய்கைக்கான உரம் குறைவின்றி விநியோகிக்கும் துரித நிகழ்ச்சித்திட்டம்


கடந்த காலங்களில் உர மானியக் கொள்கை அடிக்கடி மாற்றமடைந்ததால், உர இறக்குமதி செய்யும் கம்பனிகளுக்கு சரியான வகையில் கொடுப்பனவு செலுத்தப்படாமை, தரநியமமற்ற உரம் சந்தைக்கு வந்தமை போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதனால், அந்நிலைமையைத் தவிர்ப்பதற்கு 2020/21 பெரும்போகத்திலிருந்து விவசாயிகளுக்கு உரத்தை வழங்குவதற்கான பொறிமுறையைச் சரியான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.


• நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுத்தல், சூழல் நேய உரப் பாவனையை நெற் செய்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்


• 2020/21 பெரும்போகத்திற்கான நெற் செய்கையாளர்களுக்குத் தேவையான உரம் மெட்ரிக் டொன் 230,000 இனை அரச உரக் கம்பனி ஊடாக விரைவுபடுத்தி இறக்குமதி செய்தல்


• நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு 2020/21 பெரும்போகச் செய்கைக்காக உரம் 332,000 மெட்ரிக் டொன் தேவைப்படுவதுடன், அதற்கமைய உரக் கம்பனிகளிடம் 40,000 மெட்ரிக் டொன் கையிருப்பை கவனத்தில் கொண்டு, மேலதிமாகத் தேவைப்படும் 300,000 மெட்ரிக் டொன் உரம் இறக்குமதி செய்வதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள உரக் கம்பனிகளுக்கு அனுமதி வழங்கல்


• தகுதிவாய்ந்த ஏனைய உரக்; கம்பனிகளுக்கு அதிகப்படியான 5,000 மெட்ரிக் டொன் அளவின் கீழ் 2020/21 பெரும்போகத்திற்கான உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கல்


• நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500.00 ரூபாவுக்கு எந்தவொரு விவசாயிக்கும் சந்தையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல்.


அதற்கமைய, மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்களும் விவசாய அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த கூட்டு பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


04. 2021 ஆம் ஆண்டிற்கான இலவசப் பாட நூல் அச்சிடுதல்
2021 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாட நூல் விநியோகத்திற்கான 400 வகையான நூல்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபார்சுகளுக்கமைய 106 பாட நூல் வகைகளின் 13,890,000 பிரதிகள் 1,093.71 மில்லியன்கள் அரச அச்சகக் கூட்டுத்ததாபனத்தின் மூலமும் மேலும் 294 பாட நூல் வகைகள் 25,541,500 பிரதிகள் 2059.01 மில்லியன்கள் திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் அச்சு நிறுவனங்கள் மூலமும் அச்சிடுவதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


05. திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் 'பொதுமக்கள் தினம்' ஆகப் பிரகடனப்படுத்தல்
அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமையை தற்போது 'பொதுமக்கள் தினம்' ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திங்கட்கிழமை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றிலிருந்து திங்கட் கிழமை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.