சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 
ஒருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

   ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே, இவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

   கடந்த 16 ஆம் திகதி டுபாயிலிருந்து வந்த இவருக்கு, கொரோனாத் தொற்று இருப்பதாக
உறுதி செய்யப்பட்டு, வெலிக்கந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றி அனுப்பட்டிருந்ததுடன், அங்கு அவருக்கு மூன்று தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாகவும்  தொற்று இருப்பதாக உறுதி  செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

   அதனையடுத்து,  அவரைக் கடந்த 24 ஆம் திகதி முதல் அவருடைய வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகுமாறு அறிவுருத்தி, 10 ஆம் திகதி வெலிக்கந்தை வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

   அவரை 17 ஆம் திகதி அவசர நோய்ச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்த போது, அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

   அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகியிருந்த காலப்பகுதியில், அவருடைய தயாரும் அந்த வீட்டில் இருந்தமையால் அவரையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.