கொரோனா வைரசு தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.

இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.