இன்றைய தினம் (14) இலங்கையில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3262 ஆக உயர்வடைந்துள்ளது. 

இன்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 11 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தும், நால்வர் பஹ்ரைனில் இருந்தும் (கடற்படை வீரர்கள்), நால்வர் பங்களாதேஷ் இல் இருந்தும், மூவர் கட்டார், வியட்நாம் மற்றும் குவைத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிய வருகிறது.

மேலும் 05 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்திய கடற்படை வீரர்கள் எனவும், மேற்படி அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் இன்றைய தினம் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.