கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்திற்கு உள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக மற்றும் அதிக உஷ்ணத்துடன் கப்பல் இருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளது.

கப்பலின் மூலம் ஏற்படக்கூடிய சமுத்திரவியல் பாதிப்புக்களைப் பற்றி ஆராய்வதற்காக இன்று அதிகாலை நான்கு மணியளவில் நிபுணர்கள் குழுவொன்று ஸ்தலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டர் இந்திக்க டீ சில்வா தெரிவித்தார்.

இந்தக் கப்பல் முதற்தடவையாக தீ விபத்திற்கு உள்ளான இடத்தில் இருந்து பெறப்பட்ட கடல் நீர் மாதிரிகள் இன்று சோதனையிடப்படவுள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் ரோஹித்த அபய குணவர்த்தன இதனை தலைமை தாங்கினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.