(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆறுமுகன் தொண்டமானை பலர் விமர்சித்திருந்தாலும் அவர் யாரையும் விமர்சித்ததில்லை. தமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதிகாரத்தை பயன்படுத்தும் ஒருவராக இருந்தார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்றத்திலும் தேசிய ரீதியிலும் பல சேவைகளை ஆற்றியுள்ளார். அவரின் இழப்பை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினோம். அவருடைய காலத்தில் ஒரு தொழிற்சங்வாதியாக மக்கள் பிரிதிநிதியாகவும் நல்ல பணிகளை ஆற்றியுள்ளார் என்பதை வரலாறு சொல்லும்.

அவ்வாறான ஒருவரை இந்த நாடும் மலையக சமூகமும் இழந்துள்ளது. அவரது பணியை தொடரும் வாய்ப்பை ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆறுமுகன் தொண்டமானை பலர் விமர்சித்திருந்தாலும் அவர் யாரையும் விமர்சித்ததில்லை. எடுத்த விடயத்தில் உறுதியாக இருப்பார் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.