(நிருபர் ரஸ்மின்)

புத்தளம் கொழும்பு முகத்திடலில் நேற்று (17) இடம்பெற்ற வீதி விபத்தில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், அக்குழந்தையின் தாயும், தந்தையும் கடுமையான காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி கணமூலை மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த முஹம்மது பாசில் முஹம்மது பாஹிர் (வயது 7 மாதம்) எனும் ஆண் குழந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், சிறிய ரக கார் ஒன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் தனது பெற்றோர்களுடன் பயணித்த 7 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அக்குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.