பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கான போட்டி தொடரில் கலந்து கொள்வது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் அணிக்கு அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் பங்களாதேஸ் கிரிக்கெட் அணி தலைவர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் அணி தலைவர்களுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் விஜயம் தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கிய பரிந்துரை கிரிக்கெட் நிறுவனத்தால் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும் போது மாற்றுத் திட்டத்தைக் கையாள வேண்டி ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.