(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளுந்தரப்பில் கூட சிலருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் அதிலுள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபிலுள்ள சில குறைபாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் மேலும் சில கட்சி தலைவர்களால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதன் பின்னரே அவை குறித்து ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் தீர்மானித்தார்.

அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருப்பதற்கும், அந்த குழுவினால் பரிந்துரைக்கப்படுகின்ற விடயங்களையும் ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.